
கோலிவுட்டின் ஹாட் எழுத்தாளர்கள் ஆகியிருகிறார்கள் இரட்டை எழுத்தாளர்களான சுபா என்கிற சுரேஷ், பாலகிருஷ்ணன் இருவரும். இதுவரை ஜேடி ஜெர்ரி, கே.வி.ஆனந்த் போன்ற ஒரு சிலருக்கு மட்டுமே பணிபுரிந்து வந்த இவர்கள் முதல்முறையாக இயக்குனர் ஜெயம்ராஜாவுக்கு பணிபுரிய வந்திருப்பது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
அதுவும் விஜய் நடிக்கும் வேலாயுதம் படத்தில் என்றால் எதிர்பார்ப்பு ஒருபடி அதிகம்தான். தொடர்ந்து 4 படங்கள் சரியாக போகததால் வேலாயுதம் படத்தை மிகவும் நம்பியிருகிறார் விஜய். விஜயைப் போலவே ரசிகர்களும், விநியோகஸ்தர்களும் வேலாயுதம் படத்தை ஆர்வமாக எதிர்பார்க்கிறார்கள். விஜய் படத்தில் கதை இருக்காது அல்லது ஒரேவிதமான கதைதான் இருக்கும் என்ற குற்றச்சாற்றை வேலாயுதம் படத்தில் எழுத்தாளர்கள் சுபா & பாலகிருஷ்ணன் இணைந்ததன் மூலம் பொடிப் பொடியாக்கும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்புக்கு காரணம்.
ஜெயம் ராஜா இயக்கிய நான்கு படங்களுமே கதையின் வலிமையால் வெற்றி பெற்றவை. குடும்பமாக உட்கார்ந்து பார்ப்பதற்கு உத்தரவாதம் தருபவை. வேலாயுதம் படத்திலும் அடர்த்தியான கதை இருக்கும் என்பது அனைவரின் நம்பிக்கை. ஜெயம் ராஜாவின் ஸ்கிரிப்ட் நாலேஜ்க்கு வலு கூட்டுகிற மாதிரி சுபாவின் திரைக்கதை இருக்கும் . இதை அயன் படத்தில் நிருபித்தார்கள் என்றும், இதனால் திரைக்கதையோடு, படத்தின் வசனம் எழுதும் பொறுப்பையும் இந்த இரட்டை எழுத்தாளர்களிடம் ஜெயம் ராஜா ஒப்படைத்திருக்கிறார் .
கே.வி.ஆனந்தின் ஆஸ்தான எழுத்தாளர்களான இவர்கள் கனா கண்டேன், அயன் படங்களுக்கு கதை, வசனம் எழுதியதோடு, தற்போது படப்பிடிப்பில் இருந்து வரும் கோ படத்துக்கும் இவர்களே இவர்களே திரைகதை, வசனம். மொத்தத்தில் கதை ஏரியா ஸ்ட்ராங்காக இருப்பதால் வேலாயுதம் சூப்பர் ஹிட் வெற்றி பெறும் என்பது கோடம்பாக்கத்தில் இப்போதே டாக் ஆகியிருக்கிறது.
0 comments:
Post a Comment